உள்ளூர் ஆட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபை தவிர்ந்த 18 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பமாக உள்ளது
உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலுக்காக இன்று திங்கட்கிழமை 17 முதல் 20 திகதி வரை அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இம்மாவட்டத்திலுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 மற்றும் உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை 20 ஆகும்
ஆனால் கல்முனை மாநகர சபை மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நீதிமன்ற காரணங்களால் தற்போது நடை பெற மாட்டாது ஏனைய 18 சபைகளுக்கான தேர்தல் நடைபெறும்

கருத்துரையிடுக