ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை விளையாட்டு கழகம் (SSC) சாம்பியன் பட்டத்தை வென்றது.

சம்மாந்துறை விளையாட்டு கழகம் (SSC) சாம்பியன் பட்டம் வென்றது.

சம்மாந்துறை நண்பர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை விளையாட்டு கழகம் (SSC) சாம்பியன் பட்டத்தை வென்றது.

16 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், இறுதிப் போட்டியில் SSC அணியும், ஒலுவில் Eastern Worries அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட SSC அணி, ஒலுவில் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

இச் சுற்றுப் போட்டித் தொடரில் தொடர் ஆட்டநாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக - ஜே. எம் ரிகாஸ்,இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக - எம். எம். எம். சிப்ராக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்