புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் நேற்று பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் இறுதிச் சடங்கு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கொழும்பு பொலிஸ் பிணவறையில் நேற்று பிற்பகல் சடலத்தின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது மேலும் அவரது மூத்த சகோதரி மற்றும் தாயார் உடலைப் பெற வந்திருந்தனர்.
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய போது அணிந்திருந்த உடையையும் காவல்துறை விசேட அதிரடிப்படை கண்டுபிடித்துள்ளது.
நீர்கொழும்பு,கொச்சிக்கடை ரிதிவேலி வீதியில் இந்த ஆடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலங்களை தொடர்ந்தே இந்த ஆடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே , கணேமுல்ல சஞ்சீவவின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறை நீதிமன்றில் அறிவித்துள்ளது
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் பணிப்புரையின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
உடலை பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக