மஸ்கெலியா மவுஸ்சாகலை தோட்டத்தில் தொடர் குடியிருப்பில் தீ விபத்து..!!

மஸ்கெலியா மவுஸ்சாகலை  தோட்டத்தில் தொடர் குடியிருப்பில் தீ விபத்து.

நேற்று 17 ம் திகதி நல்வரவு 11 .45.மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுஸ்சாகலை தோட்டத்தில் இலக்கம் 4ம் தொடர் குடியிருப்பில் தீ பரவியது.


இத் தீ பரவலின் போது அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் தற்போது அதே தோட்டத்தில் உள்ள நூலகத்தில் தங்க வைத்து உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த தீ பரவலின் போது தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்டநிரவாகம் மஸ்கெலியா பொலிஸார் இணைந்து தீ பரவலை கட்டு படுத்த நடவடிக்கை எடுத்து தீயைக் கட்டுபடுத்தினார்கள்.

தீயினால் உடமைகள் சேதம் அடைந்து உள்ளதுடன் முழுமையாக எரிந்து உள்ளது.


இத் தீ பரவலின் போது உயிர் சேதங்கள் இல்லை தீ பரவியது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் ஆண்கள் 7 பேர் பெண்கள் 15 பேர் பாடசாலை மாணவர்கள் 5 பேர் அடங்குவர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்