இம்முறை “புனித ஹஜ்” கடமையை நிறைவேற்ற இலங்கையில் 3500 பேர்களுக்கு சவூதி அரசு அனுமதி
சவுதி அரேபியாவுடன் கை கோர்த்த இலங்கை, இந்த ஆண்டு 3,500 இலங்கை முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரையை உறுதி செய்திருக்கிறது.
இந்த நிகழ்வில், இலங்கை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில், சவுதி அரேபியாவின் ஹஜ் துணை அமைச்சர் அப்துல்ஃபதா பின் சுலைமான் மஷாத் ஆகியோர் இந்த முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஹஜ் காலத்தில் இலங்கை யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.
மேலும், இரு நாடுகளும் இணைந்து எதிர்காலத்தில் ஹஜ் யாத்திரை வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
இந்த நிகழ்வில், தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் ஷேக் முனீர் முலாஃபர், ரியாத்துக்கான இலங்கை தூதர் அமீர் அஜ்வத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தம், இலங்கை முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இம்முறை “புனித ஹஜ்” கடமையை நிறைவேற்ற இலங்கையில் 3500 பேர்களுக்கு சவூதி அரசு அனுமதி.!!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக