ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்கள்.!!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச இன்று(27) நடவடிக்கை எடுத்தார். 

இதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அவர்களும், 2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களும் இன்று(27) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களால் நியமிக்கப்பட்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்