அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கட்சியில் தாம் வகித்துக் கொண்டிருக்கும் பதவியை இராஜினாமா செய்ய இருப்பதாக தெரிகிறது.
இது சம்பந்தமான ஊடக சந்திப்பு ஒன்றினை இன்று பிற்பகல் 4.00 மணியளவில் நடத்த உள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர் கொண்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெல்லுவார் என்றும் புள்ளி விவரங்கள் காட்டினார்.
ஆயினும் கட்சி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு முடிவு செய்தது.
இதனால் அப்துல்லாஹ் மஹ்ரூப் இம்முறை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை.
இவரது இந்நடவடிக்கை குறித்தும், கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக செயற்பட்டவர்கள் குறித்தும் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை அப்துல்லாஹ் மஹ்ரூப் வெளிப்படுத்தியதாக அக்கட்சியின் கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் றிஷாட் பதியூதீன் தலைமையில் நடைபெற்றது. எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கருத்துரையிடுக