குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!!

 

குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை(08.07.2024) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

குருக்கள்மடம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டு மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், குறித்த நபவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற உத்தரரவைப் பெற்று சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் பொலிசார் இதன்போது  தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்