2000 ஆயிரம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நுழைந்த ஏ.எல்.எம்.அதாஉல்லா அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் சம்மாந்துறை தொப்பி முகைதீன். ஆகியரோடு பொதுசன பெரமுன கட்சியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிட்டார்.
2000 செப்டம்பர் 16 ஆம் திகதி பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் திடிர் இழப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பேரியல் அஷ்ரப் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுசன பெரமுன அம்பாறை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களைப் பெற்றிருந்தது.. இதில் பேரியல்.அதாஉல்லா . தொப்பி முகைதீன்.விமலவீர திஸாநாயக்க அடங்குவர்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரசுக்குள் பேரியல் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களுக்கிடையிலான இரட்டைத் தலைமை விவகாரம் பூதாகரமானது.
இறுதியாக ரவூப் ஹக்கீம் அவர்களின் ஒற்றைத் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் பயணித்தது.
முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிகா அரசில் இருந்து விலகிய போது பாராளுமன்ற பெரும்பான்மை இழக்கப்பட்ட போது ஜேபிபி சந்திரிகா அரசுக்கு முட்டுக் கொடுத்த நிலையிலும் இரண்டு வருடங்கள் முடிவுற்ற நிலையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி சந்திரிகா கலைத்துவிட்டார்.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாளித்ததன் மூலம் பாராளுமன்ற பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றது.
சந்திரிகா ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இந்த நாட்டை ஆட்சி செய்தனர்
பிரதமர் ரணிலின் அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் அமைச்சராகவும். அதாஉல்லா இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த காலகட்டத்தில்தான் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் தவிசாளர் அதாவுல்லா அவர்களுக்கான முரண்பாடு ஆரம்பமானது.
பாராளுமன்றம் இரண்டு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் ஜனாதிபதி சந்திரிகாவினால் மீண்டும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸை விட்டு வெளியேறிய அதாஉல்லா ஜனாதிபதி சந்திரிகா அவர்களோடு இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார்.
அதாஉல்லாவின் வெற்றி ஜனாதிபதி சந்திரிகா அவர்களை பெரும் சந்தோசத்தில் ஆழ்த்திய நிலையில் தனது கெபினட்டில் இடம் கொடுத்து பலம் பொருந்திய அபைச்சராக்கினார்..
சந்திரிகாவின் இரண்டு தடவைக் காலம் பூர்த்தியான பிற்பாடு 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக சந்திரிகாவினால் அறிவிக்கப்பட்டிருந்தார்.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் அதாஉல்லா மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நேரடியான ஆதரவை வழங்கியிருந்தனர்.
இத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். மஹிந்த தலைமையிலான அரசில் அதாஉல்லா மீண்டும் பலம் பொருந்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் சரத் பொன்சேகாவுக்கும் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஆதரவு வழங்கிய நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றிருந்தார்.
அரசியலமைப்பு சட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகும் 2015 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
ஜனாதிபதி மஹிந்தவை எதிர்த்து அவரின் சுதந்திர கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக எதிர்க் கட்சிகளால் களம் இறக்கபட்ட போது தபால் வாக்குகள் அளிக்கப்பட்ட பிற்பாடு ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய நிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இதே ஆண்டு பாராளுமன்ற தேர்தலை அறிவித்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத் தேர்தலில் போட்டியிட்ட அதாஉல்லா தோல்வியை சந்தித்திருந்தார்.
தனது தோல்வியே தனக்கான வெற்றி என முழங்கிய அதாவுல்லா 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினார்.
இதேவேளை ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் சஜீத் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கினர்.
இத் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ பெரும் வெற்றி பெற்றிருந்தார்.
இதேவேளை கோட்டபாய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தற்போது ஜனாதிபதியின் ஆயுட் காலம் முடிவடைந்து தேர்தல்கள் திணைக்களத்தினால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
இருந்த போதிலும் இதிலும் யார் ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றியடைவர்

கருத்துரையிடுக