ஈரான் ஜனாதிபதியின் வருகை முன்னிட்டு கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்.!!

கொழும்பில் இன்று (24) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள் இன்று (24) காலை 9:45 மணி முதல் 11 மணி வரை மூடப்படவுள்ளன.

அத்தோடு கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை இன்று (24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்