மட்டகளப்பு ஆனைப்பந்தி இந்துமகளிர் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா .!!


மட்டகளப்பு ஆனைப்பந்தி இந்துமகளிர் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா.

மட்டகளப்பு ஆனைப்பந்தி இந்துமகளிர் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா நேற்று (11.04.2024) சிறப்பாக இடம்பெற்றது . கல்லூரியின் அதிபர் நிமலினி பேரின்பராஜா அம்மணி தலமையில் கல்லூரி ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரி மாணவிகளின் காலாசார வாத்திய இசையுடன் அதிதிகள் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கலவிளக்கேற்றலை தொடர்ந்து இறைஆராதனையுடன்  தமிழ்த்தாய்வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்பு நடனத்துடன் விழா ஆரம்பமானது .

பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற தமிழ் மொழித்தினப்போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு குழுநடனம் ,விவாதம்,விலல்லிசைப்பாடல்  மற்றும் நாடகம் என்பன மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 

இந் நிகழ்வின் போது ஆன்மிக அதிதியாக அணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரர் ஆலய பிரதம குரு கலந்து கொண்டிருந்ததோடு அதிதிகளாக  மட்டக்கப்பு வலய கல்வி அலுவலக பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி T.உதயகரன் , திரு K.கரிகரராஜ் , ஓய்வு நிலை மாகாணக்கல்வி பணிப்பாளர் திரு M .பவளகாந்தன் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்