ஸ்ரீலங்கா பொலீசார் மற்றும் அதிரடிப் படையினரின் தடைகளை மீறி ஏராளமான பக்தர்களுடன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடு சிங்கள பொலீசாரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அவைகளை மீறி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
தடை உடைத்துச் சென்றதன் கோபம் காரணமாக அப்பகுதிக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான நீர் விநியோகத்தை தடுத்து பொலீசார் மனித நேயமற்ற அருவருக்கத்தக்க செயலை புரிந்தனர்.
வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி நிகழ்வுகளுக்கு சைக்கிள் மோட்டார்சைக்கிள் உழவுஇயந்திரம் என எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
எனவே வழிபாடுகளுக்குரிய நீரை கிட்டத்தட்ட 10 கிலோமீற்றர்கள் தூரத்திற்கு கிராம இளைஞர்கள் தோளில் சுமந்து செல்கின்றார்கள்.இந்தக் கஸ்ரங்களின் சிறுபாரத்தை சுமக்கவாவது வாய்ப்புள்ளவர்கள் இக்கோயிலின் சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.



கருத்துரையிடுக