தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்.!!

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்.!!

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில் 2023.03.26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 


இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய, ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நாடளாவிய ரீதியில் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதன் இறுதிக்கட்டத்தை குறிக்கும் வகையில் இந்த தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு கல்வி அமைச்சின் முன்முயற்சியில் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் இந்தத் தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் அங்கத்தவர்களாக பங்குபற்றியிருந்தனர்.



கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்ற ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். 

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகையில், எப்பொழுதும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட்ட ஒரே ஆசிய நாடு இலங்கையாகும் எனத் தெரிவித்தார். ஜனநாயக முறையில் இலங்கை இதுவரை வந்த பயணம் தொடர்பில் தேசிய மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி விளக்கினார். பாராளுமன்ற முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மாணவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து ஜனாதிபதியுடன் உரையாடலில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதியினால் அவசகம் வழங்கப்பட்டது.





பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இங்கு உரையாற்றுகையில், இலங்கை வரலாற்றில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட கட்டடமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்த தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்துகொள்ளக் கிடைந்தமை மனவர்களுக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பமாகும் எனது தெரிவித்தார். பாராளுமன்ற முறைமை மற்றும் குழு முறைமை தொடர்பில் அவர் இதன்போது விளக்கமளித்தார். 

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் உரையாற்றிய கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா குறிப்பிடுகையில், இந்தத் தேசிய பாராளுமன்றம் இந்நாட்டு மாணவர்களின் தலைமைத்துவப் பண்பை விருத்தி செய்வதற்கும், புத்தகங்களுக்கு அப்பால் சென்று பிரயோக ரீதியாக அரச முறைமை தொடர்பாக கற்றுக்கொள்வதற்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பாகும் எனது தெரிவித்தார். 

தேசிய மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வின் போது நாடுதழுவிய மாணவர் பாராளுமன்ற வேலைத்திட்டம் தொடர்பான "பிபிதுனு சிசு மெதி சபய" நூலும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக்க தங்கொல்ல, கல்விப் பணிப்பளார் கீதானி சுபசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொது வெளித்தொடர்பு முகாமையாளர் புத்தினீ ராமநாயக்க, பொது வெளித்தொடர்பு அதிகாரிகளான துமிந்த விக்ரமசிங்க, ரிஷ்மியா நூட்டான், அனுராதா திலகரத்ன, பா. ருத்ரகுமார் மற்றும் பொது வெளித்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜய பிரகாஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்