சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை.!!

சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அம்பாரை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு நாளை (23) கள விஜயம்.

சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த காலத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் அயராத முயற்சியின் மூலம் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை, பொத்துவில், ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையாக கருதப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பின்னர் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிர்மாணப்பணிகள் தாமதமடைந்ததை தொடர்ந்து, அவற்றை நிறைவு செய்வதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்த நிலையில், சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை நிர்மாணப் பகுதிக்கும், சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளுக்கும் நாளை (23) கள விஜயம் மேற்கொள்ள உள்ளதோடு, விரைவான தீர்வுகள் பற்றி குறித்த குழுவினருடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்