நாட்டின் இன்றைய வானிலை மாற்றம் நாட்டிலுள்ள சில பிரதேசத்தில் மழை.!!

நாட்டின் இன்றைய வானிலை மாற்றம் நாட்டிலுள்ள சில பிரதேசத்தில் மழை மக்களுக்கு எச்சரிக்க.

(கலாநிதி மொஹமட் சாலிஹீன்)

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மத்திய மலைப்பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணகாணப்படும்.

கடல் பிராந்தியங்களில் 

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் வடகிழக்குத்  திசையில் இருந்து  காற்று வீசும். 


காலி  தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன் கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி  காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்