போராடித் தோற்ற இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.!!

ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிக்கு இடையிலான  போட்டியில்  ஆப்கானிஸ்தான் அணி  3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

முதலில்  துடுப்பெடுத்தாடிய  ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் Kamindu Mendis ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 65 ஓட்டங்களை பெற்றதுடன் Pathum Nissanka உபாதை காரணமாக வௌியேறிய நிலையில் 60 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

 3 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்