இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் மகளான பாடகி பவதாரிணி அவர்கள் இலங்கையில் காலமானார்.

இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் மகளான பாடகி பவதாரிணி அவர்கள் இலங்கையில் காலமானார். 

இவர் ராசையா திரைப்படத்தில் "மஸ்தானா மஸ்தானா" என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, பல திரையிசைப் பாடல்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்துக்காக "மயில் போல பொண்ணு ஒன்று" என்ற பாடலை இளையராவின் இசையில் பாடியதற்காக தேசிய விருதும் பவதாரணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

பவதாரணி நோயுற்றிருந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சையை பெற்றுக் கொள்ளும் விதமாக இலங்கை வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி கொழும்பில் ஏற்பாடாகி இருப்பதால், இளையராஜ அவர்களும் தற்சமயம் இலங்கையில் இருக்கின்றார்.

பவதாரணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் இரசிகர்களுக்கு எமது அனுதாபங்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்