கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவு பொதிகள் கிழக்கு மாகாண சமூக சேவைத்தினைக்களத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் காத்தான்குடி ஸாஹிரா விசேட பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன,
மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அலியார் அவர்களது ஒழுங்கமைப்பில் ஓய்வு பெற்ற அதிபர் சத்தார் அவர்களது தலைமையில் ஸாஹிரா விசேட பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உலர் உணவு பொதிகளை கையளிப்பு செய்து வைத்தார்கள்-
இதன்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஜவாத் ,சமூக சேவை உத்தியோகத்தர் ராஜ்மோகன், முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை, பாடசாலையின் நிருவாகிகள் , ஆதம்பாவா ஹாஜி, பாறூக் ஹாஜி, மக்பூல் ஹாஜி, செய்யிட் அஹமட் சாஹிர் மௌலானா , முன்னாள் அதிபர் சயீத் , கட்சி செயற்பாட்டாளர் அப்துல் அஸீஸ் (கபூர்) உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக