அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் புதிய அதிபர் பதவி ஏற்பு.
மிகநீண்ட காலமாக அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் காணப்பட்ட நிருவாக சீர் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கல்வி அமைச்சின் செயலாளரால் கல்வி நிருவாக சேவை அதிகாரி ஏ.எச்.பௌஸ் (SLEAS) புதிய அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முதலாவது முஸ்லிம் தேசிய பாடசாலையும் இலங்கையில் இரண்டாவது முஸ்லிம் தேசிய பாடசாலையுமான அக்கரைப்பற்றறு முஸ்லிம் மத்திய கல்லூரி ஆளுமையற்ற அதிபர்களால் கடந்த சில வருடங்களாக சீரழிக்கப்பட்டு கல்விச் சமூகத்தின் கடுமையான விமர்சனத்திற்குட்பட்டிருந்தது.
இதனைச் சீர் செய்ய பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், கல்வியியலாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மேற்கொண்ட பகீரத முயற்சியின் விளைவாக அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கல்லூரியின் பழையமாணவனுமான கல்வி நிருவாக சேவை அதிகாரி ஏ.எச்.பௌஸ் அவர்கள்அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
கல்லூரிச் சமூகம் இன் நியமனத்தால் மிகவும் மகிழ்வுற்று புதிய அதிபரை வரவேற்கின்றது.

கருத்துரையிடுக