கொழும்பு பிரதான வீதியில் எல்ல ஹல்பே பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.!!

பதுளை-கொழும்பு பிரதான வீதியில் எல்ல ஹல்பே பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் இன்று (12.08.2023) மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பெண்கள், மூன்றரை வயது சிறுமி மற்றும் இரண்டு ஆண்கள், தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்