வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழி ஒன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளன.
புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வலப்பனை, குருதுஓயே பகுதியில் உள்ள புதையல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறும் பகுதியென கருதப்படும், குழியொன்றில் இருந்தே - 61 வயதான அபேசிங்க பண்டா மற்றும் 30 வயதான ருவான் குமார ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் நேற்று முன்தினம் வீடு திரும்பாத நிலையில், அது தொடர்பில் உறவினர்கள் வலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் விசாரணையின்போதே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழிக்குள் இருந்து தண்ணீர் மோட்டார் இயந்திரமும், குழிக்கு வெளியே இருந்து ஜெனடேட்டர் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.









கருத்துரையிடுக