நிறத்தை கேலி செய்த கணவனை கோடாரியால் வெட்டி கொலை மனைவி கருப்பாக இருப்பதை அடிக்கடி கேலி .!!

நிறத்தை கேலி செய்த கணவனை கோடாரியால் வெட்டி கொலை

மனைவி கருப்பாக இருப்பதை அடிக்கடி கேலி செய்து வந்த கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள அம்ளிஸ்வர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான்(40). இவரின் மனைவி சங்கீதா(30). மனைவி

சங்கீதாவின் கருப்பு நிறத்தை வைத்து அவரது கணவர் கேலி செய்து வருவதும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு ஆனந்த் சோன்வானி அவரது மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை விடாமல் கேலி செய்து வந்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கணவன் ஆனந்தை வெட்டி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர்கள் கைது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்